Nadhiye Nadhiye Video Song | Rhythm Tamil Movie Songs |Arjun|A. R. Rahman|Pyramid Music

A soft solo song from the movie Rhythm released in the year 2000, The Movie directed by Vasanth . It is a super duper hit, featuring popular actors Arjun, Jyothika, Meena, and Ramesh Arvind in leading roles with Lakshmi, Nagesh, Manivannan and Others. The song sung by Unni Menon. Music composed by A. R. Rahman and lyrics by Vairamuthu. The song titles and lyrics were inspired by the five elements wind, water, fire, sky and Earth. This song represents water.In this song vairamuthu compares river (water) with woman. a wonderful dazzling song .

Song: Nadhiye Nadhiye ….

Singers: Unni Menon

Music:A. R. Rahman

Director: Vasanth

Producer: Pyramid Natarajan

ஆண் : { தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா திரனா } (2)

ஆண் : நதியே நதியே
காதல் நதியே நீயும்
பெண்தானே அடி நீயும்
பெண்தானே

ஆண் : ஒன்றா இரண்டா
காரணம் நூறு கேட்டால்
சொல்வேனே நீ கேட்டால்
சொல்வேனே

ஆண் : { தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா திரனா } (2)

ஆண் : நடந்தால் ஆறு
எழுந்தால் அருவி நின்றால்
கடல் அல்லோ சமைந்தால்
குமரி மணந்தால் மனைவி
பெற்றால் தாய் அல்லோ

ஆண் : { சிறு நதிகளே
நதியிடும் கரைகளே
கரைதொடும் நுரைகளே
நுரைகளில் இவள் முகமே } (2)

ஆண் : தினம் மோதும்
கரை தோறும் அட ஆறும்
இசை பாடும்

பெண் : ஜில் ஜில் ஜில்
என்ற ஸ்ருதியிலே

ஆண் & பெண் : கங்கை
வரும் யமுனை வரும்
வைகை வரும் பொருணை
வரும்

பெண் : ஜல் ஜல் ஜல்
என்ற நடையிலே

ஆண் : தினம் மோதும்
கரை தோறும் அட ஆறும்
இசை பாடும்

பெண் : ஜில் ஜில் ஜில்
என்ற ஸ்ருதியிலே

ஆண் : கங்கை வரும்
யமுனை வரும் வைகை
வரும் பொருணை வரும்

பெண் : ஜல் ஜல் ஜல்
என்ற நடையிலே

ஆண் : காதலி அருமை
பிரிவில் மனைவியின்
அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய்
கோடையிலே

ஆண் : வெட்கம் வந்தால்
உறையும் விரல்கள்
தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று
வாடையிலே

ஆண் : { தண்ணீர் குடத்தில்
பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில்
முடிக்கிறோம் ஓஹோ } (2)

ஆண் : { தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா திரனா } (2)

ஆண் : வண்ண வண்ண
பெண்ணே வட்டமிடும்
நதியே வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு

ஆண் : ஹோ.. மெல்லிசைகள்
படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்
நதிகளின் குணமே அது
நங்கையின் குணமே

ஆண் : { சிறு நதிகளே
நதியிடும் கரைகளே
கரைதொடும் நுரைகளே
நுரைகளில் இவள் முகமே } (2)

ஆண் : { தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா திரனா } (2)

ஆண் : தேன்கனியில்
சாராகி பூக்களிலே
தேனாகி பசுவினிலே
பாலாகும் நீரே

ஆண் : தாயருகே சேயாகி
தலைவனிடம் பாயாகி
சேயருகே தாயாகும்
பெண்ணே

ஆண் : பூங்குயிலே
பூங்குயிலே பெண்ணும்
ஆறும் வடிவம் மாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண்
நினைத்தால் கரைகள் யாவும்
கரைந்து போக கூடும்

ஆண் : நதியே நதியே
காதல் நதியே நீயும்
பெண்தானே அடி நீயும்
பெண்தானே

ஆண் : ஒன்றா இரண்டா
காரணம் நூறு கேட்டால்
சொல்வேனே நீ கேட்டால்
சொல்வேனே

ஆண் : { தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா திரனா } (2)