முடி உதிர்வை தடுக்க என்ன செய்யலாம்..?
பெண்களுக்கான கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்.

பிரசவமான மூன்றாம் மாதம் எல்லாப் பெண்களுக்குமே கூந்தல் உதிர்வு இருக்கும். கொத்துக்கொத்தாக உதிர்வதைப் பார்த்து பயந்துபோவார்கள்.
அது தற்காலிகமானதுதான். ஹார்மோன் மாற்றங்கள் சீரடைந்த பிறகு முடி உதிர்வதும் நின்றுபோகும்.
அதுவரை எந்தவிதமான கெமிக்கல் சிகிச்சைகளையும் மேற்கொள்ளாமல் எளிமையான விஷயங்களைப் பின்பற்றுவது போதுமானது’’ என்கிறார் அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி . அவர் அளிக்கும் டிப்ஸ் இளம் அம்மாக்களுக்காக!
-
உங்கள் உணவில் ஆளி விதையை அல்லது அதன் பொடியைச் சேர்த்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளவும். இதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் பருமனைக் குறைப்பதோடு, கூந்தல் ஆரோக்கியத்தையும் காக்கும்.
-
தினமும் உணவில் ஏதேனும் ஒரு கீரை அவசியம் இடம்பெற வேண்டும்.
-
மதிய உணவில் பொன்னாங்கண்ணிக்கீரை அல்லது அரைக்கீரை சேர்த்துக் கொள்வது கூந்தல் ஆரோக்கியத்துக்கு அவசியமான இரும்புச்சத்தைக் கொடுக்கும்.
-
தோசை மாவில் செம்பருத்திப்பூவை அரைத்துக் கலந்து சாப்பிடுவதும் நல்லது.
-
சாம்பார், கூட்டு, பொரியல், சாலட் என எதைச் சாப்பிட்டாலும் அதில் கைநிறைய கறிவேப்பிலை சேர்த்துக்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளவும்.
-
நில ஆவாரையுடன் துவரம் பருப்பும், தேங்காயும் சேர்த்து பொரியலோ, கூட்டோ செய்து சாப்பிடலாம்.
-
சுண்டைக்காய், ஆப்பிள், நெல்லிக்காய், பசலைக்கீரை, வல்லாரைக்கீரை போன்றவற்றை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஏதேனும் ஒரு வடிவில் சேர்த்துக் கொள்ளவும்.
-
முட்டையின் வெள்ளைக் கருவுடன் ஆலிவ் ஆயில் கலந்து தலையில் தடவி, மென்மையாக மசாஜ் செய்து, மைல்டு ஷாம்பூ உபயோகித்து அலசவும்.
-
முதல்நாள் இரவே சிறிது வெந்தயத்தை ஊறவைக்கவும். மறுநாள் காலை அந்தத் தண்ணீரை மட்டும் வடித்து, தலையில் தடவி 2 மணி நேரம் அப்படியே வைத்திருந்து பிறகு அலசலாம்.
-
கற்றாழை ஜெல்லுடன் தேங்காய்ப்பால் சேர்த்துக் குழைத்து, தலையில் மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசவும்