உடம்பிலுள்ள தேவையற்ற கொழுப்பை குறைத்து ஸ்லிமாக மாற சூப்பரான 5 டிப்ஸ்
Fat to fit tips in tamil
நாம் விரதம் இருக்கும்போது, நமது பசியை அடக்குவது கடினமான ஒரு காரியம். அதிக நேரம் சாப்பிடாமல், திடீரென்று பசியை உணரும்போது, நாம் சாக்லேட்டுகள், ஐஸ்கிரீம், பீட்ஸா போன்றவற்றை சாப்பிட விரும்பலாம்.
ஆனால் நாம் விரும்புவதை எல்லாம் சாப்பிடுவது நம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிலும், நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் ஒருவராக இருந்தால், உணவு விஷயத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலே கூறப்பட்டுள்ள உணவு வகைகளில் பெரும்பாலும் சர்க்கரை, கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் அதிகம் உள்ளன. இது போன்ற உணவுகள் அதிக அளவு கலோரிகளை உட்கொள்வதற்கோ அல்லது அதிக உணவை உட்கொள்வதற்கோ வழிவகுக்கலாம். எனவே, கலோரி நிறைந்த உணவுகளை சாப்பிட ஐந்து வழிகள் இங்கே உள்ளது.
1. உங்கள் உணவைத் திட்டமிடுங்கள்:
ஆரோக்கியமான உணவைத் திட்டமிடுவது கடினமான ஒரு விஷயம் அல்ல. ஒரு ராஜாவைப் போன்ற காலை உணவு, ஒரு இளவரசனைப் போன்ற மதிய உணவு, மற்றும் பிச்சைக்காரனைப் போல ஒரு இரவு உணவு சாப்பிட வேண்டும் என்பது பழமொழி.
காலை உணவு மிக முக்கியமான உணவு. ஒரு சத்தான காலை உணவு உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்கிறது. ஆனால் கனமான உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சப்பாத்தி மற்றும் வதக்கிய காய்கறிகள் போன்ற வீட்டில் சமைத்த உணவை உண்ணுங்கள். இரவு உணவில் நீங்கள் சாப்பிடும் அளவை கண்காணிக்க வேண்டும்.
2. சீரான உணவு:
நாம் சாப்பிடும் உணவு கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் புரதங்களின் ஆரோக்கியமான சமநிலையை பெற்று இருக்க வேண்டும். முழு தானியங்கள், குயினோவா அல்லது பருப்பு வகைகள் போன்றவற்றை சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது நீண்ட நேரம் முழுதாக உணர உதவுவது மட்டுமல்லாமல், அஜீரணத்திற்கும் உதவுகிறது.
3. ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்:
மாலை நேரத்தில் டீ, காபி பருகும் போது ஸ்நாக்ஸ் சாப்பிடுவது எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால், இந்த பழக்கம் தீங்கு விளைவிக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். நீங்கள் கலோரிகளைக் குறைக்க விரும்பினால், உங்கள் மாலை பசிகளைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி ஆரோக்கியமான விருப்பங்களுக்கு மாறுவதாகும்.
நொறுக்கு தீனிகளுக்கு பதிலாக விதைகள், கொட்டைகள் மற்றும் பழங்களை நீங்கள் சாப்பிடலாம். முளைக்கட்டிய பயறு, வேகவைத்த சோளம் போன்றவை சாப்பிடுவது கூட உங்கள் பசியை குறைக்கும்.
4. சர்க்கரையை குறைக்கவும்:
ஒரு சிலருக்கு இனிப்பு சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். ஆனால் சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது அல்லது அதை மாற்றுவது எடை இழப்புக்கு உதவுவதோடு நீண்ட காலத்திற்கு நீரிழிவு நோயின் அபாயத்தையும் நீக்குகிறது. சர்க்கரைக்கு பதிலாக கலோரி இல்லாத இனிப்பான ஸ்டீவியாவைப் பயன்படுத்துங்கள்.
5. வாழ்க்கை முறை மாற்றங்கள்:
இது நாம் உண்ணும் உணவை விட அதிக அளவில் முக்கியமானது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது போன்ற சில அடிப்படை மாற்றங்கள் உங்கள் ஆரோக்கியத்தை மாற்றும்.
ஒரு மோசமான தூக்க வழக்கம் பசியை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் தூக்கத்தை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். தினசரி தியானம் மற்றும் சரியான நேரத்தில் உணவை உட்கொள்வது போன்ற ஒரு வழக்கத்தை எப்போதும் கடைப்பிடிக்கவும்.