உங்கள் குழந்தைகளுக்கு 3 நாட்கள் தொடர்ச்சியான காய்ச்சலா..?

கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா விடுத்துள்ள விசேட அறிவித்தல்

உங்கள் குழந்தைகளுக்கு 3 நாட்கள் தொடர்ச்சியான காய்ச்சலா..?

உங்கள் குழந்தைகள்  தொடர்ந்து  மூன்று நாட்கள் காய்ச்சலில் பாதிக்கப்பட்டால் , உடனடியாக அருகிலுள்ள  வைத்தியர் ஒருவரை நாடுமாறு கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார். தற்போதைய சூழலில் அக்காய்ச்சலானது டெங்கு மற்றும் கொவிட் ஆகிய நோய்களுக்கான பொதுவான அறிகுறி எனவும் அவர் கூறியுள்ளார்.

வைரஸ் காரணமாகவே, காய்ச்சல் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வானிலை மாற்றத்தினால், வைரஸ் காய்ச்சல் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேபோன்று, தற்போதைய சூழலில் டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளதாக விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவிக்கின்றார்.