நம்மைப்பற்றிய சுய சிந்தனைகள் என்றால் என்ன.? | சுயத்தை எவ்வாறு கட்டியெழுப்பலாம்.
எவ்வாறு சுய எண்ணம் ஒழுங்கமைக்கப்படுகின்றது. எவ்வாறு சுய எண்ணம் கட்டியெழுப்பப்படும் அல்லது அழிக்கப்படும்? சிறந்த சுய மரியாதைக்கான நன்மைகள்

நம்மை பற்றிய சிந்தனை/தனிப்பட்ட மற்றும் சமூக அடையாளங்கள்
சுயம் என்பதை தனித்துவமான இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். தனிப்பட்ட நிலையில் சுயம் என்பது ஒரு தனித்துவமானதாகும். அதே சமயம் சமூக நிலையில் பார்க்கும் போது சுயம் என்பது ஒரு குழு உறுப்பினராக கருதப்படுகின்றது.
அகக்குழு ஒப்பீடு (Intragroup Comparisons)
ஒரே குழுவில் உள்ளத் தனித்தனி அங்கத்தவர்களை ஒப்பீடு செய்வதன் மூலம் கணிப்பு மேற்கொள்ளப்படும்.
ஒரு குழுவினை இன்னொரு குழுவுடன் ஒப்பீடு குழுக்களுக்கிடையேயான ஒப்பீடுகளை மேற்கொள்ள முடியும். செய்யும்
சுய சிக்கல் (Self complexity)
எவ்வாறு சுய எண்ணம் ஒழுங்கமைக்கப்படுகின்றது என நோக்கினால், யாருடைய சுய கருத்து சிக்கலாக ஒழுங்கமைக்கப்படுகிறதோ தனிப்பட்ட ரீதியான முக்கியமான அம்சங்கள் நபருக்கு நபர் வேறுபட்டுக் காணப்படும். யாருடைய சுய எண்ணம் சிக்கல் குறைந்ததாகக் காணப்படுகிறதோ அவர்களுக்கு சுயம் தொடர்பான வேறுபட்ட விடயங்களில் அதிகமாக வேறுபாடு காணப்படும். நாங்கள் எங்களை எவ்வாறு நோக்குகின்றோம் என்பதன் விளைவாகவே நாங்கள் நெருக்கீட்டினை அனுபவிக்கின்றோம்.
எவ்வாறு சுய எண்ணம் கட்டியெழுப்பப்படும் அல்லது அழிக்கப்படும்?
சுயத்தினைக் கட்டியெழுப்பபல் (Building self)
- நல்ல முன்மாதிரியினை அடையாளம் காணல்.
- பாராட்டுதல்.
- நேரான விடயங்களில் கவனம் செலுத்துதல்.
- குறைந்தபட்ச விமர்சனங்களை வைத்திருத்தல்.
- அடையக்கூடிய இலக்கினை தீர்மானித்தல்.
சுயத்தினை அழித்தல் (Desstroying Self)
- உங்களை வேறு நபர்களுடன் ஒப்பிடுதல்.
- உங்களை நீங்களே தாழ்வாக நினைத்தல்.
- போதைக்கு அடிமையாகுதல்.
ஏற்றதான மற்றும் உண்மையான சுயம்
எதிர்பார்க்கும் சுயம்
இது நீங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என ஆசைப்படுவதாகும்.
எதாவது வழிகாட்டியான உலக பிரபலங்களின் பண்புகளை ஒத்ததாக நீங்கள் கொண்டிருக்க எதிர்பார்ப்பவை.
உண்மையான சுயம்
நீங்கள் உண்மையில் காணும் நபர் இவர்தான்.
நீங்கள் பராமரிக்காத சுயம் பற்றிய பணடபுகள் சில வேலைகளில் பிறப்பிளாலானது.
சுய அறிவுகள் அடிப்படையில் உருவாக்கப்படுவதே உண்மையான சுயம் ஆகும்.
இது மற்றவர்கள் உங்களுடன் எவ்வாறு நடந்துக்கொள்கிறார்கள் எனும் சமூக தொடர்பாடலின் மூலம் வருவதாகும்.
உண்மையான சுயம் (actual self) என்பது உண்மையாக நாங்கள் யார் என்பதாகும்.
இது நாங்கள் எவ்வாறு சிந்திக்கின்றோம், எவ்வாறு உணர்கின்றோம் மற்றும் எவ்வாறு பார்க்கின்றோம் என்பதாகும்.
உண்மையான சுயம் (actual self) மற்றவர்கள் பார்க்க முடியும் ஆனால் உண்மையிலேயே அறியக்கூடிய எந்த வழியும் இல்லை.
மற்றவர்கள் எங்களை எவ்வாறு நோக்குகிறார்கள், உண்மையான சுயம் என்பது எங்களது சுய காட்சி (self-image) ஆகும்.
ஏற்றதான சுயம்
என்பதுநான் எவ்வாறு வர விரும்புகிறோம் என்பதாகும்.
இது ஒரு உயர் சிந்தனையுள்ள காட்சி காலப்போக்கில் அபிவிருத்தி செய்து நாங்கள் அனுபவித்த மற்றும் அறிந்ததன் அடிப்படையிலான ஒன்றாகும்.
எதிர்பார்க்கப்படும் சுயம் என்பது எங்களுடைய பெற்றோரால் கற்பிக்கப்பட்டதும் மற்றவர்களிடமிருந்து நாங்கள் ரசிக்கும் விடயம், எங்களுடைய சமூகம் எவ்வாறு ஊக்குவிக்கப்படுகிறது மற்றும் எங்களுடைய மிகச்சிறந்த ஆர்வம் என நாங்கள் சிந்திக்கும் சில கூறுகளை உள்ளடக்கியுள்ளது.
சுயத்தை கட்டியெழுப்புவதற்கான குறிக்கோள்கள்
மக்கள், புத்தகங்கள், வீடியோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் எங்களுடைய சுயமரியாதையை கட்டியெழுப்பக்கூடியவற்றை இனங்காணல் மூலம் நேர்மையான ரணப்படுத்தல்களை ஏனையவர்களுக்கு அளிப்பதன் மற்றவர்களை கட்டியெழுப்புதல்.
- நேரான சிந்தனை.
- இலக்குகளை தீர்மானித்தல்.
- ஓவ்வொரு நாளும் சவாலான ஏதாவது செய்தல்.
- உங்களின் மிகச்சிறந்ததை பார்த்தல்.
- யாருக்காவது ஏதாவது செய்தல்.
- ஒரு புதிய திறனை கற்றல்.
- நீங்கள் விரும்பும் பண்பு உங்கள்டம் உள்ளவாறு நடத்தல்.
- மனிதர்களுடைய சுய எண்ணங்களை அவதானித்தல்.
- ஒரு நேரத்தில் பல விடயங்களை கையாளுதல்.
- விமர்சனங்களை ஆக்கவூர்வமாகப் பயன்படுத்தல்.
- உதவி கேட்டல், கற்றல் வாய்ப்புக்கள் தொடர்பான நன்மைகள்.
- ஒவ்வொரு நாளும் தனிப்பட்ட ரீதியான வளர்ச்சிக்கு நேரம் ஒதுக்கல்.
- சுய முன்னேற்றம் தொடர்பான நினைட்டல்களைக் காட்சிப்படுத்தல்.
- உங்களைப்பற்றி எதிர்மறையானவற்றை சொல்லக்கூடாது.
- நீங்களாகவே வெகுமதியளிக்க வேண்டும்.
- ஒவ்வொரு பின்னேரங்களிலும் உங்கள் சாதனையைப் பட்டியலிட வேண்டும். தானகவே முன்வந்து உங்களுடைய திறனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
- பெறுமதிகளும் ஒழுக்கமும் உங்களைப்பற்றிய நல்ல உணர்வுடன் எவ்வாறு பொருந்துகிறது?
- உங்களைப்பற்றி அறிந்து கொள்வது சுய மரியாதைக்கான முன்நிபந்தனையாகும்.
- உங்கள் பெறுமதியினடிப்படையிலேயே வாழ வேண்டும். உங்கள் பெறுமதி செயற்பாடுகளுக்கு நெருக்கமாக வரும் போது நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.
சிறந்த சுய மரியாதைக்கான நன்மைகள் (Advantages of good self- esteem)
சுய சுய மரியாதை என்பது நம்மைப்பற்றிய உண்மையான உணர்ச்சிமிக்க உணர்வுகள் மற்றும் நம்மை பற்றிய கருத்துக்கள், மதிப்பு மற்றும் தனிப்பட்ட பெறுமதிகளாகும் அது தன்னைப்பற்றிய நம்பிக்கைகளை உள்ளடக்ககின்றது. (உ-ம்: நான் மதிப்பிற்குரியவன்) மற்றும் சில உணர்ச்சி நிலைகள்-பெருமை, அவமானம், விரக்தி, மற்றும் வெற்றி நிலைகளாகும் இது எவ்வாறு நினைக்கின்றோம், செயல்படுகின்றோம் மற்றும் மற்றவர்களுடன் தொடர்புபடுகின்றோம் மற்றும நம் வாழ்வை வாழ்வதற்கான ஆற்றல் என்பவற்றில் தாக்கம் செலுத்துகின்றது. உண்மையில், சுய மரியாதை என்பது எவ்வாறு நாம் சந்தோஷமாக இருக்கின்றோம் மற்றும் எங்கள் நலனில் உள்ள நேரடியான தாக்கம் ஆகும்.
உயர் சுய மரியாதையானது உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நேர்மறையான அனுபவத்திற்கும் ஒரு அடித்தளத்தை உருவாக்கி ஒவ்வொரு சூழ்நிலையிலும் நேர்மறையான பக்கங்களைப் பார்க்க உதவுகின்றது. உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்திற்கும் உயர்ந்த சுயமரியாதை முக்கியம். ஏனெனில் இது நீங்கள் செய்யும் அனைத்து நல்ல விஷயங்களுக்கும் பொருந்தி நிற்கின்றது.
சிறந்த சுய மரியாதைக்கான சாதகமான நன்மைகள்
1.நீங்கள் நெகிழ்திறன் (resilient) உடையவராகலாம்.
நீங்கள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பிரச்சினைகள் மற்றும் சிரமங்களுக்கு மிகவும் தளர்வானவர்களாக உள்ளீர்கள். உங்கள் சுய மரியாதை உயர்ந்தால் தோல்வியிலிருந்து திரும்புவதற்கும் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும் நிலைமையை மேம்படுத்தவும் தடைகள் அனைத்தையும் நீங்குவதற்கான திறனையும் திறமையும் உங்களால் வளர்த்துக் கொள்ள முடியும்.
2.நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
நீங்களும் உங்களை மதிக்கின்றீர்கள் மற்றும் மற்றவர்களும் உங்களை மதிக்கிறார்கள் என்பதற்காக நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் உள்ளடக்கத்தையும் (content) உணர்வீர்கள். நீங்கள் எங்க சென்றாலும் உலகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒருவராக உங்கள் மகிழ்ச்சியின் அற்புதமான உணர்வை வெளிப்படுத்துகிறீர்கள்.
3.நீங்கள் தானாகவே உறுதிப்படுத்தப்படுகிறீர்கள் (Self Assured)
சுய உறுதியானது நீங்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கம் போது மாத்திரம் பயனுள்ளதாக அமையாது அதனோடு நீங்கள் ஒரு சமூக திட்டத்தில் அல்லது சவாலில் முன்னணி வகிக்க வேண்டும் என போது மிக எளிதாக இருக்கும். நீங்கள் உறுதியுடன் செயல்பட்டால் மக்கள் யாராவது தலைவனை பின்பற்றுவதை போலவே உங்களையும் பின்பற்றுவர்.
- நேர்மறை சிந்தனை (Positive thinking)
நீங்கள் முழு நிறைவாக (Perfect) இருக்க தேவையில்லை என உணர்கிறீர்கள் ஆதலால் உங்களுக்கு மன அழுத்தம் குறைவாக இருக்கும். நீங்கள் தவறான முடிவுகளை எடுக்க பயப்பட மாட்டீர்கள், ஏனெனில் யாராலும் தவறுகள் டிசய்ய முடியும் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.
- உங்கள் சொந்த சுயத்தை உருவாக்குங்கள். (Own self) நீங்கள், நீங்களாகவே இருங்கள் மற்றம் மற்றவர்களுடைய எதிர்பார்ப்புக்களை சந்திப்பதற்காக நீங்கள் கட்டாயமாக உங்களது நடத்தை, பெறுமதிகளை தழுவிக்கொள்ளல் வேண்டும்.