Telegram செயலிக்கு ஆபத்து - பதறியடித்துக்கொண்டு அறிக்கைவிட்ட CEO துரோவ்!

Telegram செயலிக்கு ஆபத்து - பதறியடித்துக்கொண்டு அறிக்கைவிட்ட CEO துரோவ்! அமெரிக்காவில் வெடித்த வன்முறைக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால், டெலிகிராம் செயலியை ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கக்கோரி புகார் எழுந்துள்ளது.

Telegram செயலிக்கு ஆபத்து - பதறியடித்துக்கொண்டு அறிக்கைவிட்ட CEO துரோவ்!

வாட்ஸ் ஆப் பிரைவசி பாலிசி அப்டேட்டுக்கு மக்களிடையே பலத்த எதிர்ப்பு எழுந்த நிலையில், அதற்கு மாற்றாக உலகம் முழுவதும் டெலிகிராம் செயலியை அதிகளவு பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கினர். குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியை சந்தித்த டெலிகிராம் செயலி தற்போது அமெரிக்காவில் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஜனவரி 6ம் தேதி அமெரிக்காவில் நடைபெற்ற வன்முறை தொடர்பான அழைப்புகளையும், மெசேஜ்களையும் முறையாக தடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

அமெரிக்காவில் லாபநோக்கமற்ற Coalition for a Safer Web கூட்டமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பு ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிராக இந்த வழக்கை தொடர்ந்துள்ளது. டிரம்ப் அதிபர் தேர்தலில் தழுவிய தோல்வியை ஏற்கமறுத்து அமெரிக்காவில் அவரது ஆதரவாளர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனவரி 6 ஆம் தேதி வெள்ளை மாளிகையிலும் நுழைந்து அவர்கள், வன்முறையிலும் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை துப்பாக்கிச்சூடு நடத்தி காவல்துறையினர் கட்டுப்படுத்தினர். 

இந்நிலையில், இந்த போராட்டத்துக்கான அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் தொடர்பான கன்டென்டுகளை டெலிகிராம் செயலி முறையாக தணிக்கை செய்யவில்லை என அமெரிக்காவில் இயங்கிவரும் Coalition for a Safer Web கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இதனால், இந்த செயலியை ஆப்பிள் நிறுவனம் தனது பிளே ஸ்டாரில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என அந்த அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், வெள்ளை நிற மேலாதிக்கவாதிகளுக்கு ஆதரவாகவும், வெறுப்பு பிரச்சாரங்களுக்கு துணை செல்லும் வகையில் டெலிகிராம் செயலியில் அதிகமான தகவல்கள் இடம்பெற்றிருப்பது ஆப்பிள் ஸ்டோர் விதிமுறைகளுக்கு எதிரானது என கூறியுள்ளது. 

இதனால், உடனடியாக ஆப்பிள் பிளே ஸ்டோரில் இருந்து டெலிகிராம் செயலி நீக்கம் செய்யப்பட வேண்டும் என அந்த அமைப்பு வழக்கில் கோரியுள்ளது. மேலும், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தும் டெலிகிராம் செயலியை நீக்கம் செய்ய வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டெலிகிராம் செயலியில் CEO துரோவ் (Durov), டெலிகிராம் செயலியில் இடம்பெறும் கன்டென்டுகள் மற்றும் தகவல்களை கண்காணிக்கவும், முறைப்படுத்தவும் அமைதியான முறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 

வன்முறைக்கு எதிரான எந்த ஒரு அழைப்புகளையும் டெலிகிராம் செயலி ஊக்குவிக்கவில்லை என தெரிவித்துள்ள அவர், கடந்த 7 ஆண்டுகளாக உலகம் முழுவதும் இதனை கடைபிடித்து வருவதாக தெரிவித்துள்ளார். பெலாரஸ், இரான், தாய்லாந்து, ஹாங்காங் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களின் போராட்டம் பெருமளவில் வெடித்தபோதும், வன்முறைக்கு ஆதரவாக டெலிகிராம் ஒருபோதும் நிற்கவில்லை என துரோவ் விளக்கமளித்துள்ளார். 

மனித உரிமைகளுக்கு ஆதரவாக இருப்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனவரி மாதம் தொடக்கத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்ததாகவும், அதற்குஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் துரோவ் தெரிவித்துள்ளார். வன்முறையை தூண்டும் வகையிலான நூற்றுக்கணக்கான அழைப்புகள் துண்டிக்கப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், அமெரிக்காவில் நடைபெறும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் துரோவ் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.