சிம்புவின் பத்து தல திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை

Paththu thala update. Simbu next film update

சிம்புவின் பத்து தல திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை

சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் பத்து தல திரைப்படத்தின்  பெஸ்ட் லுக் வெளியிடப்பட்டதிலிருந்து ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

இக் கொண்டாட்டத்தினை இரட்டிப்பாக்கும் முகமாக இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பார் என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் கிருஷ்ணாவின் அறிமுக படமான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்திற்கும் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து அனைத்துப்பாடல்களும் மெகாஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் கேங்ஸ்டார் கதாப்பாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார் என்ற தகவல் மாத்திரமே படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர், அதே போல் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், மற்றும் கலையரசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.