கதையில் சில மாற்றத்துடன் வெளியாகும் கமலின் ‘ஆளவந்தான்’

ஆளவந்தான் திரைப்படத்தில் சில மாற்றங்களை செய்து அதை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார் தயாரிப்பாளர் எஸ்.தாணு.

கதையில் சில மாற்றத்துடன் வெளியாகும் கமலின் ‘ஆளவந்தான்’

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் ஆளவந்தான். இத்திரைப்படம் 2001ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை தாணு தயாரித்திருந்தார்

தயாரிப்பாளர் எஸ்.தாணு

ஒரு குடும்பத்தில் நடக்கும் சின்னச் சின்ன தவறுகள் குழந்தைகளை எப்படி பாதிக்கும் என்பது தான் ஆளவந்தான் படத்தின் மையக்கரு. இப்படத்தில் ஒரு கொமேண்டோவாகவும், மற்றொருவர் சைக்கோவாகவும் அசத்தி நடித்திருப்பார் கமல்.

இப்படத்தை தாணு தயாரிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். கதை,திரைக்கதை,வசனம் என மூன்றரையும் கமல் கவனித்திருந்தார். இப்படம் 20 கோடி ருபா செலவில் தமிழ், இந்தியில் வெளியானது. இதில் ரவீணா டாண்டன் சிறப்பு தோற்றத்தில் மனிஷா கொய்ராலா ஆகியோர் நடித்திருந்தனர்.

ஆளவந்தான் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன்

2001ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை அந்த நேரத்தில் மக்கள் ரசிக்கவில்லை என்பதே உண்மை. இப்படம் இப்போது வெளியாகியிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். இப்படம் சிறந்த கிராஃபிக்ஸூக்கான தேசிய விருதை பெற்றது. இந்த விருது ஆளவந்தான் படத்திற்கு மேலும் பெருமையை தேடித்தந்தது.

ஆளவந்தான் கூறிய கதை வேறு, எடுத்த கதை வேறு, ஒரு குழப்பமான கதையாக அமைந்துவிட்டது. ஆகையால் ஆளவந்தான் கதையை கதையில் சில மாற்றங்களை செய்து மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளோம். இந்த படத்தை நிச்சயம் வெற்றி பெறச் செய்வேன் என்று தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார்.