ஐபோன் Vs அண்ராய்ட் பாவனைக்கு சி்றந்தது எது?
பல போன்கள் குறைந்த விலையில் நிறைய தொழில்நுட்ப வசதிகளுடன் இருந்தாலும் ஆப்பிள் ஐபோன் தான் வாங்க வேண்டும் என்று பலரும் விரும்புவது ஏன்? நான் ஆப்பிள் ஐபோனும் , அண்ட்ராய்டு கைபேசியும் உபயோகிக்கிறேன். நான் பார்த்தவரையில் ஆண்ட்ராய்டு நீங்கள் சொல்வதை கேக்கும் , ஐபோன் சொல்வதை நீங்கள் கேக்க வேண்டும். iPhone vs android phone

உதரணமாக , எனக்கு பாடல்கள் கேட்க வேண்டுமென்றால் ஆண்ட்ராய்டில் பிளே ஸ்டோரில் இல்லாத செயலியில் பாடல்கள் கேக்கிறேன் .. ஆனால் ஐபோனில் நான் காசு கொடுத்து ஆப்பிள் மியூசிகில் வாங்கிய பாடல்கள் கூட ஸ்டோரில் நாட்டினை மாற்றும் போது காணாமல் போய்விட்டது .. காரணம் கேட்டால் ஒரு நாட்டில் வாங்கிய பாடல்கள் அடுத்த நாட்டின் ஆப்பிள் மியூசிகில் பெற அனுமதி இல்லையாம்.
நன்றாக ஆராய்ந்தால் அண்ட்ராய்டில் பல வசதிகள் இருக்கு, கட்டுப்பாடு இல்லை .. இருந்தும் மக்கள் ஐபோன் வாங்க காரணம் ..
அறியாமை , என் நண்பர்கள் பலர் ஆண்ட்ராய்டு வேகமாக இல்லை , பல வருஷம் வராது என்றுசொல்வதுண்டு .. அவர்கள் 1 லட்சம் ருபாய் மதிப்புள்ள ஐபோனை 35 ஆயிரம் மதிப்புள்ளஆண்ட்ராய்டு உடன் ஒப்பிடும் அறியாமை அது. 85+ ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் 12 மினி 128 gb யை அதே விலை உள்ள நீங்கள் சாம்சங் s20+ உடன் ஒப்பிடுங்க .. கொடுக்கும் காசுக்கு எது பலவருடம் பிரச்னையின்றி உழைக்கும்னு எளிதாக தெரியும்.
விளம்பரம் : இன்று வரை பலர் ஐபோன் வாங்க காரணம் steve jobs என்ற பெயர்தான். உலகம்முழுவதும் இவருக்கு ரசிகர்கள் கோடி , இந்த ஒரு பிம்பம்தான் இவர்களின் விளம்பர யுக்தி. மனிதன் எந்த ஒரு விஷயத்தையும் உணர்ச்சி பூர்வமாக அணுகக்கூடியவன். ஜாப்ஸ்இன் குழந்தை ஐபோன் என்ற எண்ணத்தை பல வழிகளில் மக்களிடம் விதைத்து விட்டனர். மேலும் ஸ்டீவ் ஜாப்ஸ் புகழ் பெரும்போதெல்லாம் அது ஆப்பிள் நிறுவனத்திற்கு காசில்லா விளம்பரம். இதில் தவறில்லை. யூடூபியில் steve jobs என்று தேடினால் நீங்கள் ஐபோன் காணொளிகளை பார்க்க நேரிடும். அவர் இறந்த பின்பு மற்றவர் யாரும் அவர் இடத்தை பிடித்துக்கொள்ளாதவாறு பார்த்துக்கொள்வதும் வாடிக்கையாளர்களை தக்க வைக்க உதவுகிறது . ஐபோன் ரசிகர்கள் யாரும் ஸ்டீவ் ஜாப்ஸ் பிடிக்காது என்று சொல்லி நான் கேள்விப்பட்டது இல்லை. ஆனால்ஆண்ட்ராய்டை கண்டு பிடித்த அண்டி ரூபினை எதனை பேருக்கு தெரியும் ? ( Steve Jobs என்றுகூகிளில் தேடினால் ஜாப்ஸ் கையில் ஆப்பிள் பொருள்களுடன் உள்ள புகைப்படம் பல உள்ளன.. ஆனால் அண்டி ரூபினுக்கோ , மற்றவர்களோ அவ்வாறான படங்கள் குறைவு )
பொது புத்தி : ஐபோன் ரொம்ப பாதுகாப்பானது , வேகமானது என்ற எண்ணம் ஐபோன் இல்லாதோரிடமும் பொதுவாக உள்ளது. பாதுகாப்பும் , வேகமும் அவரவர் உபயோகிக்கும்முறையில் உள்ளது, ஒரே விலையுள்ள ஆப்பிள் கைபேசிக்கு ஆண்ட்ராய்டு கைபேசிக்கு வேகவித்தியாசம் 2-4 நொடிகள் மட்டுமே . ஐபோன் தரக்கூடிய அதே அளவு தரம் இன்று பலகைபேசியில் உள்ளன .. பொது புத்தியில் ஐபோன்தான் சிறந்ததுனு என்ற எண்ணம் உள்ளது. இணையத்தில் உள்ள பல ஸ்பீட் டெஸ்ட் ஒரு வகையில் தவறான தகவலையே தருகின்றன. அதாவது 20-30 செயலிகளை திறக்க எவ்வளவு நேரம் எடுக்கிறது என்பதை கணக்கிடுவது. ஒருவர் சராசரியாக 1 நிமிடத்தில் 20 செயலிகளை உபயோகிக்கமாட்டார் .. அதிக பட்சம் 2-3 செயலிகளைத்தான் உபயோகிப்பர் , எனவே அவர் உபயோகத்தில் வேகத்தில் பெரிய வித்தியாசம்தெரியாது. இணைய வேகத்தில் ஐபோன் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது..
அந்தஸ்து : பலர் அந்தஸ்துக்காக வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர் , என் நண்பர் ஒருவர் 2 வருடத்திற்கு ஒருமுறை ஐபோன் மாற்றிக்கொள்ளுவார் , ஆப்பிள் வாட்ச் வேறு .. இன்னொரு நண்பர் ஐபோனில் கால் பேசவும் , whatsappபும் மட்டுமே பயன்படுத்துவார் , ஒரு வால்பேப்பர் கூட மாற்ற தெரியாது .. ஆனாலும் வருடா வருடம் போனை மாற்றுவார் .. இதுதேவை என்பதை தாண்டி அந்தஸ்தை நிலைநாட்டும் கருவியாக பார்க்கின்றனர், மகிழ்வுந்துபோல
தொழில்நுட்பம் : ஐபோன் உபயோகிப்போர் பலர் வேறு கைபேசிக்கு செல்லாததற்கு ஒருகாரணம் அதன் மென்பொருள். மற்ற நிறுவனத்தை போல் இல்லாமல் 5 வருடம் புதுப்பிக்கும்தன்மை இருப்பதால் ,வாங்கியோர் பலர் கைபேசியை மாற்றும் தேவை இருப்பதில்லை , மேலும் அடுத்து வாங்கினால் ஐபோன் வாங்கவே எண்ணுகின்றனர் .. மேலும் இபோனின் தரம் பல கைப்பேசியைவிட சிறப்பாக இருக்கும் என்பது நிதர்சனம். ஐபாட் டச் 2015இல் வெளிவந்தது ..அதற்கு இந்த ஆண்டு வெளிவந்த மென்பொருள் புதுப்பிப்பு உள்ளது Ios 14 .. 2020 .. மற்ற கைபேசியில் 3 வருடம் மட்டுமே மென்பொருள் புதுப்பிக்க படும்.
மற்றபடி கேமரா , சாப்ட்வேர் என்பதெல்லாம் இரண்டிலும் பெரிய வித்தியாசம் கிடையாது .. நீங்கள் சாம்சங் s20 கைபேசியில் எடுத்த படத்தை ஐபோனில் எடுத்து என்றால் யாராலும் கண்டு பிடிக்க முடியாது என்பதே உண்மை. கேம்ஸ் ஆடுவதற்கு ஐபோன் நன்றாக இருக்கும் என்று சொல்லுவோர் ஐபோன் சூடாகி , பேட்டரி சில மணி நேரத்திலேயே அடங்கிவிடும் என்பதையும் சேர்த்து சொல்லுங்க .. !!
அன்றாட தேவைக்கு ஐபோனில் செய்ய கூடிய அனைத்தும் அண்ட்ராய்டிலும் செய்ய முடியும் , சொல்லப்போனால் அண்ட்ராய்டுல் செய்யக்கூடிய பல விஷயம் ஐபோனில்தான் செய்ய முடியாது ..
நன்றி