கார்த்தியின் அடுத்த படத்தில் சிம்பு: ரசிகர்கள் ஆச்சரியம்!
கார்த்தியுடன் கைகோர்க்கும் சிம்பு


கார்த்தியின் அடுத்த படத்தில் சிம்பு இணைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
சிம்பு மிகச்சிறந்த நடிகர் மட்டுமின்றி மிகச் சிறந்த பாடகர் என்பதும், அவருடைய படங்களில் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் படங்களிலும் அவ்வப்போது பாடல்களை பாடி வருகிறார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கார்த்தி நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’சுல்தான்’ திரைப்படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். விவேக்-மெர்வின் இசையில் விவேகா பாடல் வரிகளில் உருவான இந்த பாடலை சிம்பு அட்டகாசமாக பாடி உள்ளார் என்றும் ’யாரையும் இவ்வளவு அழகா’ என்று தொடங்கும் இந்த பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்தியின் படத்தில் சிம்பு பாடியுள்ள இந்த பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திக் ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தில் நெப்போலியன், லால், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை எஸ்ஆர் பிரபு அவர்கள் தனது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். மேலும் இந்த படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil Actress Image Gallery | Nayanthra | Parvathi |Priya mohan | Regina Cassandra