ஒருவர் பக்குவமடைந்து விட்டார் என்று அறிந்து கொள்வது எப்படி?
நம்மைச் சார்ந்த நம்முடன் பழகும் நபரின் செயற்பாடுகளை வைத்து அவர் பக்குவமடைந்தவரா.? என்பதை அறியமுடியும்
ஒருவர் பக்குவமடைந்து விட்டார் என்று அறிந்து கொள்வது எப்படி?
ஒரு ஆணும் பெண்ணும் காதல் வயப்பட்டனர்.
இருவரும் இரவெல்லாம் தட்டச்சில் கதைபேசி, பகலில் குரல் கேட்க ஏங்கி கால்செய்து பேசி, உலவிரவுகள் பலசுற்றி, தங்கள் காதல் பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வாழ்ந்தனர்.
இரண்டு ஆண்டுகள் ஓருடல் ஈருயிராய் இணைபிரியாது வாழ்ந்த அவர்களின் காதல் ஏனோ மூன்றாம் ஆண்டு கரைந்து விட்டது. நேரமும் தொலைவும் இடைவெளியை அதிகரிக்க காதல் ஏனோ மறையத் தொடங்கியது.
இருவரும் அதை மனதாற உணர்ந்தார்கள். பிரிந்தார்கள். சில மாதங்களுக்கு துயரம் மட்டும் வாழ்வை ஆக்கிரமித்திருக்க, அந்த காலம் முடிந்ததும் மீண்டும் காதல் வயப்பட்டார்கள், வேறு இருவர் மீது.
காதலுக்குள் விட்டுக் கொடுத்து போதல் அவசியம்.
யாருக்கும் மனதில் கற்பனை செய்தபடியே கணவன் மனைவி வாய்ப்பில்லை.
எந்தக் குறையும் இல்லாத ஒருவரை புனைவுகளில் மட்டுமே பார்க்க முடியும்.
காதல் நேரம் பிடிக்கும். நம்பிக்கை பலமடங்கு எடுக்கும்.
காதல் கரைந்த பின்னரும் அரைமனதுடன் ஒருவருடன் வாழ்ந்து இருமுனைக் கொடுமை அனுபவிப்பதை விட தனியாகவே இருந்து விடலாம்.
ஒருவரை விட்டுச் செல்ல அனுமதிக்க வேண்டும். குறைக் கூறி ஊறு விளைவித்தல், இருந்த காதலைக் கேள்விக்குறி ஆக்கிடும்.
ஒரு மனிதர் மீண்டும் மீண்டும் காதல் கொள்வார். காரிருள் இரவைத் தொடர்ந்து தான் கண்கூசிடும் காலை வருகிறது. விடியல் தெரிகிறது.
இதை எல்லாம் உணர்ந்து வாழ்க்கையை வாழ்பவரே பக்குவமானவர்.