தியானம் செய்வதால் ஆன்மாவை உணர முடியுமா? தியானத்தின் பயன் என்ன?

தியானம் பற்றிய சரியான விளக்கம் இதோ..!

தியானம் செய்வதால் ஆன்மாவை உணர முடியுமா? தியானத்தின் பயன் என்ன?
ஆத்ம நிலை கடவுளால் மாயையின் 3 உலகத்திற்காக ஏற்படுத்தப்பட்டவை ( (பகீ;8.18–19) இதற்கு சாதகம் கர்மம் தர்மம் மற்றும் தெய்வீகமாகும். ஆன்மாவின் நிலை சத்தியத்தின் அடிப்படையாகும் ( பகீ 8.20–21) மனிதப் பிறப்பின் குறிக்கோள் அந்த நிரந்தரமான இன்பகரமான வீடான அமர லோகத்தை அடைவதே , சொர்க்கத்தை அடைய அல்ல. தேவர்களே மனித உடலில் பிறக்க விரும்புகின்றனர். ஆன்மீக மார்க்கம் தெய்வீக மார்க்கம் அல்ல இது சத்தத்தின் மார்க்கமாகவும் இதில் மாயைக்கும் மகிமைக்கும் இடமில்லை. எக்காலத்திலும் என்நிலையிலும் மாறுபடாதது சத்தியமாகும்.

ஆத்மா ஒரு சாக்ஷி நிலை (time related Witness) ஆன்மா ஒரு சுய உணர்ச்சி நிலை ( Self,Awareness).

கவனம் என்பது மனதிற்கும் பஞ்சபூதங்களுக்கும் சம்பந்தம் இல்லாதது. தன்னுடைய கவனம் ஒரு நிலையை அடைவது தியானமாகும். கவனம் பொதுவாக ஐந்து இந்திரியங்கள் வழியாக உலகத்தின் தொடர்பை மனதிற்கு கொடுக்கின்றது. இந்த உருவமற்ற மனமே இந்த உலகத்திற்கு காரணம் இந்த மனமே எல்லாவற்றையும் செய்கின்றது அனுபவிக்கின்றது இந்த மனமே ஆன்மாவை ( ஒருமுக கவனத்தை) அழியும் உடலில் சிறை வைத்து பிறப்பு மற்றும் இறப்பு சூழலில் 84 லட்சம் உயிரினங்களின் கர்ப்பபைகளில் வலம் வந்தவாறு அமைத்துள்ளது. ஆகவே இந்த பிரபஞ்சம் ஒரு சம்சார சாகரம் என்று அழைக்கப்படுகின்றது. மனித படைப்பின் லட்சியமே இந்த சம்சாரக் கடலில் இருந்து விடுபடுவதே. இது வேற எந்த பிறவியிலும் நடக்காத விஷயம். போக உலகமான சொர்க்கத்திலும் ஆன்மாவிற்கு மன மாயையில் இருந்து விடுதலை கிடையாது.

மனதிற்கு வடிவம் இல்லை இருப்பினும் உடலில் எழும் சிந்தனை புத்தி சித்தம் மற்றும் அகங்காரம் இவையெல்லாம் மனம் எடுக்கும் உருவங்களே. இந்த நான்கே பந்தங்களுக்கு காரணமாகும் இந்த நான்கும் கர்ம தர்மத்திற்கு காரணம். ஆன்மாவிற்கு இவை எல்லாவற்றுக்கும் சம்பந்தமில்லை ஆன்மாவிற்கு வயிறு கிடையாது ஆன்மா பெண்ணையும் இல்லை ஆண்மையுமில்லை.

தியானத்தை ஒருமகப்படுத்த உடல் அசையக்கூடாது இதற்கு ஆசனம் தேவை மனதையும் நிறுத்த வேண்டும் அப்படி என்றால் மனதில் எந்த சிந்தனையும் இருக்கக் கூடாது எந்த நிர்ணயம் செய்யக்கூடாது இப்படி ஒரு முகமாக இருப்பது ஆன்மா என்று அழைக்கலாம் இந்நிலையில் தொடர்ந்து இருப்பது இந்த பிரபஞ்சத்தில் முடியாத ஒன்று ஆனால் சில நிமிட ஆன்மாவின் ஒளிமயமான ஆனந்தத்திலன் அனுபவம் கிட்டலாம்.

ஆத்மாவில் இருந்து மனதை பிரித்தால் ஆன்மா ஆகலாம் ஆனால் இந்த உருவம் அற்ற மனமே கடவுள். பகவத் கீதையில் நானே மனம் என்று கூறப்பட்டுள்ளது ( பகீ 7.4 &10.22) ஆகவே நிரந்தரமான முத்தி மனமாயை நிலையில் இருந்து கிடைப்பது கடவுளின் ஆதிக்கத்தில் இருந்து வெளிப்படும் வழியாகும். இதற்கு யோக மார்க்கம் உதவாது. ஆகவே ஆதியோகி சிவன் தியானத்தை ஒரு உண்மையை அறிந்த சத்குருவின் சொரூபத்தின் மேல் நிறுத்துமாறு கூறுகின்றார்..( ஏகலவ்யன் துரோணர் சொரூபத்தின் மேல் தியானம் செய்தது போல்)

கடவுள் நம்மை அவருடைய இரவு பகல் காலத்தை போக்க பாவக் கடலில் கட்டி அறம் பொருள் இவற்றை நாட நடனமாட வைத்துள்ளார். ஆனால் ஒரு உண்மையான சத்குரு ஆன்மாவை மன மாயையில் இருந்து விடுவித்து நம்முடைய இன்பகரமான வீடான அமர லோகத்தை அடையும் ஆன்மீக சக்தியை ஆன்மாவுக்கு சத்திய நாம தீட்சையின் வழியாக தந்துவிடுகிறார் ( பகீ 4.34) இதையே மோக்ஷ மூலம் குரு கிருபா என சிவ பெருமான் கூறுகிறார். ஒரு உண்மையை அறிந்த சத்குருவை தேடி அடைக்கலம் பெற்று அவருடைய அனுகிரகத்தால் ஆன்ம சத்திய பாதையை அடைந்து நிரந்தர சுதந்திரம் அடையலாம். அவர் மேல் தியானம் செய்தால் ஆன்மீக அனுபவம் கிட்டும். மதங்கள் மாயையோடு கலந்த தெய்வீக பாதையில் அழைத்துச் செல்லும். ஆனால் ஒரு  சத்குரு ஆன்மீகப் பாதையில் உங்களை அழைத்துச் செல்வார். அவர் கடவுளை வணங்குவோம் மாட்டார் வெறுக்கவும் மாட்டார்.