தினமும் கந்தசஷ்டி கவசம் படித்தால்...!
கந்த சஷ்டி கவசம் என்பது பால தேவராய சுவாமிகளால் பழனி முருகன்மீது இயற்றப்பட்ட பாடலாகும். இதன் காலம் 19ஆம் நூற்றாண்டு.[1][2] இதனை சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அரங்கேற்றினார். கந்த சஷ்டி கவசத்தில் வரும் சிரகிரி வேலவன் எனும் பதம் இத்தல இறைவனைக் குறிப்பது ஆகும்.[3] 'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர். பிற்காலத்தில் தமிழில் வெளியிடப்பட்ட கவச நூல்கள் ஆறு. அவற்றில் இந்நூல் பெரிதும் அறியப்படுவது ஆகும். இதில் எழுத்து மந்திர உச்சாடணங்கள் உள்ளன. பலர் இதன் பாடல்களை மனப்பாடம் செய்து போற்றி வழிபடுகின்றனர். பாடல் வரிகளில் யாருக்காக, யாரைக்குறித்து, யாரால், அல்லது பாடுபவர் பெயரை பாடல் வரிகளில் எழுதுவது அக்கால மரபு என்பர்.

????????சஷ்டி கவசம் படித்தால் வறுமை ஓடிவிடும், நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள்.
???????? சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள்.
????????.வீட்டில் பீடை, தரித்திரம், செய்வினை அடியோடு அழிந்துவிடும்.
????????லட்சுமி கடாட்சம், குழந்தை பாக்யம், மன நிம்மதி ஏற்படும்.
???????? கந்த ஷஷ்டி கவசம் படிக்கும் நபருக்கு புகழ், மதிப்பு கூடும்.
முக வசீகரம் ஏற்படும்.
???????? செவ்வாய் கிழமை மூன்று முறை கந்த ஷஷ்டியை படித்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
???????? ஷஷ்டி தினத்தில் முருகனுக்கு விரதம் இருந்து மூன்று முறை ஷஷ்டி கவசம் படித்து ஆலயம் சென்று முருகனுக்கு நெய் தீபம் ஏற்றினால் நடக்கவே இயலாத காரியங்களும் நடக்கும்.
????????கடவுள் நம்பிக்கை இல்லை என்பவர்களுக்கு இந்த விரதம் ஓர் சவாலாக இருக்கும்.
???????? கந்த ஷஷ்டி கவசம் என்பது சாதரண பாடல் அல்ல சர்வ சக்திவாய்ந்த மந்திரம்.
???????? முற்கால முனிவர்களும் சித்தர்களும் காட்டில் வசிக்கும் போது தீய சக்திகளிடமிருந்து தப்பிக்க சிவ மந்திரங்களையும் ஷஷ்டி கவசத்தையும் ஜெபித்து வந்தனர்..
????????எனவே தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்.