Fat to Fit just 5 Tips in tamil. உடல் எடை குறைக்கும் வழிகள்.. இரண்டே வாரங்களில் பலன்

Fat to Fit  just 5 Tips in tamil. உடல் எடை குறைக்கும் வழிகள்.. இரண்டே வாரங்களில் பலன்
Google image

வேகமாக சென்றுக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் ஒவ்வொரு தினத்திலும், நின்று நிதானமாக யோசித்து உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு.

தொப்பை போடுகிறது என்று தினம் கவலைப்பட்டாலும், அதை எப்படி குறைப்பது? என்று யோசிக்க நேரமில்லாமல் ஓடுகிறார்கள்.

அப்படியே யோசிக்கும் சிலரும், வேகமாக தொப்பையை குறைக்கும் வழிமுறைகளையே அதிகம் நாடுகின்றனர்.

அவர்களுக்காகவே இந்த 5 குறிப்புக்கள்,

4 தேக்கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, மிதமான சூட்டில் குடியுங்கள். காலை எழுந்தவுடன், இரவு படுக்க போகும் முன்பு என தினம் இருவேளை இதனை பின்பற்றுங்கள். இரண்டே மாதத்தில் உடல் இலகுவாக இருப்பது போன்று உணருவீர்கள். உங்கள் எடையை நீங்கள் சுமக்கும் பாரமே தெரியாது. உடல் எடை கணிசமாக குறையும்.

காலை 4 இட்லி அல்லது எண்ணெய் குறைவாக இரண்டு தோசை, மதியம் ஒரு கோப்ப சாதம். இரவு 2 சப்பாத்தி அல்லது 3 இட்லி. இடையில் பழங்கள், பழச்சாறுகள் என்று உங்கள் உணவு கட்டுப்பாட்டை ஒரு மாதத்திற்கு தொடர்ந்து செய்து பாருங்கள். தொப்பை மிக எளிதாக குறையும்.

4-5 பூண்டை ஒரு கோப்பை பாலில் போட்டு பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து பாலுடன் பூண்டை சாப்பிடுங்கள். பூண்டு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும்.

இஞ்சி சாறு உடலின் மெட்டபாலிச அளவை அதிகரிக்கும். உடலில் மெட்டபாலிசத்தின் அளவு அதிகமானால், கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறையும். இஞ்சி சாற்றினை தினம் ஒரு டம்ளர் பருகி வர உடல் எடை விரைவில் குறையும்.

என்னதான் உணவில் நீங்கள் கட்டுப்பாட்டோடு இருந்தாலும், தினம் அட்லீஸ்ட் 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்தே ஆக வேண்டும். தினம் 5 முறை குனிந்து உங்கள் கால் கட்டை விரலை தொடுங்கள். 2 நிமிடங்கள் தாக்குப்பிடித்து தொடர்ச்சியாக நில்லுங்கள். 
மேலும் அறிய ..~~~>>>>
உடல் பருமண் குறைய வேண்டுமா.. இரண்டே வாரங்கள் இந்த யுக்தியை பின்பற்றுங்கள்