Beetroot Facial- பீட்றூட் அழகு குறிப்புகள்

பீட்ரூட் பேஷியல்..- all type skin
பீட்ரூட்டில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதன் காரணமாகவே நம் உணவுகளில் அதிகளவு பீட்ரூட்டினை சேர்த்து கொள்கின்றோம். இந்த பீட்ரூட்டினை பயன்படுத்தி சரும அழகையும் அதிகரிக்கலாம் என்று யாருக்காவது தெரியுமா..? ஆம் உண்மை தாங்க இந்த பீட்ரூட்டினை பயன்படுத்தி சரும அழகையும் அதிகரிக்கலாம். இதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க முடியும். பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை மென்மையாகவும், இளமையுடன் வைத்துக்கொள்ளும். சரி இந்த பீட்ரூட் பயன்படுத்தி சருமத்தை அழகாக்கக்கூடிய சில பேசியலை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.
முகம் வெள்ளையாக 2 பீட்ரூட் ஃபேஸ் பேக்..!
Beetroot for Face Whitening – பேஷியல்: 1
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் – சிறிய அளவில் 1
ஊறவைத்த அரிசி – ஒரு ஸ்பூன்
கற்றாழை ஜெல் – 2 ஸ்பூன்
எலுமிச்சை – 1/2 துண்டு
செய்முறை:-
ஒரு சிறிய அளவில் உள்ள பீட்ரூட்டினை எடுத்து கொள்ளுங்கள், அவற்றை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
பின் அவற்றை மிக்சியில் சேர்க்கவும், பின் இதனுடன் ஒரு ஸ்பூன் ஊறவைத்த அரிசி, கற்றாழை ஜெல் 2 ஸ்பூன், எலுமிச்சை 1/2 துண்டு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நல்ல பேஸ்ட்டு போல் அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
இப்பொழுது ஃபேஸ் பேக் தயார் இதனை முகத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் வரை காத்திருக்கவும் பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இந்த முறையினை வாரத்தில் ஒரு முறை பின்பற்றி வர பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும், மேலும் சருமத்தை இளமையுடன் மற்றும் பொலிவுடன் வைத்து கொள்ளும். மேலும் முகம் வெள்ளையாக காணப்படும்.
பேஷியல்: 2
தேவையான பொருட்கள்:-
பீட்ரூட் – 1
அரிசி மாவு – 2 ஸ்பூன்
தேன் – 2 ஸ்பூன்
செய்முறை:-
Beetroot Face Pack
ஒரு பீட்ரூட்டினை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் உள்ள தோல் பகுதியை நீக்கிவிடுங்கள் பின் நன்றாக துருவி கொள்ள வேண்டும்.
பின் துருக்கிய பீட்ரூட்டில் இருந்து சாறு பிழிந்து ஒரு சுத்தமான பவுலில் எடுத்து கொள்ளுங்கள்.
பின் இந்த பீட்ரூட் சாறுடன் இரண்டு ஸ்பூன் அரிசி மாவு, இரண்டு ஸ்பூன் தேன் இவை இரண்டையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
இப்பொழுது ஃபேஸ் பேக் தயார் இந்த ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்றாக அப்ளை செய்யுங்கள்.
பின் 20 நிமிடங்கள் காத்திருந்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இந்த ஃபேஸ் பேக்கினை வாரத்தில் 2 இரண்டு முறை செய்து வரலாம். இவ்வாறு செய்வதினால் சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் பருக்களினால் ஏற்படும் தழும்புகள் அனைத்து நீங்கி முகத்தை ஜொலிஜொலிக்க செய்யும்.