2025 ஐபிஎல் - தோனியின் கடைசி சீசனில் செய்யவிருக்கும் புது யுக்தி!
2025 ஐபிஎல் தொடர் மார்ச் 22 முதல் மே 25 வரை நடைபெற உள்ளது. தோனி தனது கடைசி சீசனில் புதிய பேட்டுடன் விளையாட உள்ளார். CSK ரசிகர்கள் அவருக்கு கோப்பையை அர்ப்பணிக்க வேண்டுமா?

2025 ஆம் ஆண்டின் மிக எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 18வது சீசன் மார்ச் 22 முதல் மே 25 வரை நடைபெற உள்ளது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது. இந்த தொடர் தோனியின் கடைசி ஐபிஎல் எனும் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளதால், ரசிகர்கள் அவருக்கு வெற்றி பரிசாக கோப்பையை அர்ப்பணிக்க வேண்டும் என உறுதிபூண்டுள்ளனர்.
தோனியின் புதிய பேட்:
43 வயதாகும் மஹேந்திர சிங் தோனி, இந்த சீசனுக்காக தனது பேட்டின் எடையை 10 - 20 கிராம் குறைத்து 1230 கிராம் கொண்ட புதிய பேட்டை பயன்படுத்த உள்ளார். வயது காரணமாக அதிக எடையுள்ள பேட்டை நீண்ட நேரம் தாங்க முடியாது என்பதால், இந்த மாற்றம் அவரது விளையாட்டு நேர்த்தியை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
CSK ரசிகர்கள் உற்சாகத்தில்:
இந்த சீசன் தோனிக்கு கடைசி என்பதால், சென்னை ரசிகர்கள் “தல” மீது அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். CSK மீண்டும் கோப்பையை கைப்பற்றுமா? தோனி கடைசி முறையாக IPL பீட்சகதை உருவாக்குவாரா?